இந்தியா

ம.பி.: பெண் அமைச்சர் பற்றி கமல்நாத்தின் பேச்சு சர்ச்சையானது

ENS


மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான கமல்நாத்தின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிராதித்திய சிந்தியா ஒரு விசுவாசி என்றும், மாநில அமைச்சர் இமார்தி தேவி ஒரு 'ஐடம்' என்றும் கமல்நாத் பேசியது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இமார்தி தேவி, ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். இவர் தாப்ரா (தனி) தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஏழு மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் இமார்தி தேவிக்கு, இதே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குவாலியர் மாவட்டம் தாப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் ராஜேவை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்த கமல்நாத், சுரேஷ் ராஜே நமது வேட்பாளர். மிகவும் எளிமையான மனிதர். அவர்களைப் போல அல்ல, அவரது பெயர் என்ன? உங்கள் எல்லோருக்குமே அவரைப் பற்றி என்னை விட அதிகமாகவே தெரிந்திருக்கும். நீங்கள் எல்லோரும் என்னை எச்சரித்திருக்க வேண்டும்.. என்ன ஒரு ஐடம்! என்று பேசினார்.

இது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, ஒரு பெண் அமைச்சர் பற்றி, முன்னாள் முதல்வர் கமல்நாத் எவ்வாறு இப்படி ஒரு கருத்தைக் கூற முடியும். பெண்கள் மற்றும் தலித் மக்களை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT