இந்தியா

லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் பிடிபட்டார்

19th Oct 2020 02:40 PM

ADVERTISEMENT

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது.

மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய ராணுவத்தினர் மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர்.

இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் சீன ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், அந்த சீன ராணுவ வீரர், சுசூல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் இந்திய ராணுவத்தினரால் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் அருகே சுமர் - டெம்சோக் பகுதியில் ரோந்து சென்றபோது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரரை, இந்திய ராணுவம் பிடித்தது. அவரிடம் இந்திய ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சீன ராணுவத்துக்கு உளவு பார்ப்பதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா -  சீனா எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ டாங்கிகளும் ஏவுகணைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இருதரப்புக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கும் பதற்றமான சூழ்நிலையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் பிடிபட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT