இந்தியா

சர்வதேச பட்டினிப் பட்டியல்: அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா

17th Oct 2020 02:33 PM

ADVERTISEMENT


புது தில்லி: 107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில் 94-வது இடத்தில் இந்தியா இடம்பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டு 102வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறி 94வது இடத்தைப் பிடித்தாலும், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது.

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்கதேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன.

வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்ட இந்த பட்டியலில், இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் விகிதம் மிகவும் கவலைதரும் வகையில் உள்ளது. அதாவது 27.2 ஆக இருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

132 நாடுகளில் பட்டினியால் வாடும் மக்களின் விவரங்களைக் கணக்கெடுத்த இந்த ஆய்வில், வெறும் 107 நாடுகளின் புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  இது ஏற்கனவே பதிவான புள்ளி விவரங்கள் என்றும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட தாக்கம் இதில் பதிவாகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் மூன்று அடிப்படை விஷயங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பலி விகிதம் உள்ளிட்டவை இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
 

Tags : India World
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT