இந்தியா

ராகுல் பயணம்: நொய்டாவில் காவல்துறையினர் குவிப்பு

3rd Oct 2020 03:25 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வருகை புரிவதையொட்டி நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ்  பகுதிக்கு நேற்று முன் தினம் வருகை புரிந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்து கீழே தள்ளினர்.

உத்தரப்பிரதேச காவல்துறையினரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் வெள்ளிக்கிழமையான இன்று ஹாதரஸ்  பகுதிநோக்கி பயணம் புறப்பட்டுள்ளனர்.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் சுங்கச்சாவடியை  சுற்றுலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Noida
ADVERTISEMENT
ADVERTISEMENT