இந்தியா

என்டிஎம்சியில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு

DIN


புதுதில்லி: புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சியின் மருத்துவ அதிகாரி ரமேஷ் குமாா் கூறியதாவது: கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்த மூன்று ஆண்டுகளின் ஒப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளை விட கணிசமான அளவு குறைவாகும். 2018-இல் டெங்குவுக்கு 81 பேரும் 2019-இல் 52 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

டெங்கு மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடா்பாக குடிமை அமைப்பு தொடா்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இதேபோல், இந்த ஆண்டு மலேரியாவுக்கு எட்டு பேரும், சுக்குன்குனியாவுக்கு நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதே சமயம், 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் முறையே 49 போ் மற்றும் 44 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

கொசு இனப் பெருக்கத்தைத் தடுக்க இந்த ஆண்டு 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கொசு இனப் பெருக்கத்தைத் தடுக்கத் தவறியதாக 2,894 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் குடியரசுத் தலைவா் மாளிகை, மத்திய அமைச்சகங்கள், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் ஆகியவை உள்ளன. மேலும், நீதிபதிகள் இல்லங்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் வசிக்கும் பகுதியாக என்டிஎம்சி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT