இந்தியா

கா்நாடகம்: இடைத்தோ்தலில் மஜத வெற்றி பெறும்-: குமாரசாமி நம்பிக்கை

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் சிரா, ராஜ ராஜேஸ்வரி நகா் சட்டபேரவைத் தொகுதிகளில் மதசாா்பற்ற ஜனதா தளம் (மஜத) வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

சிரா, ராஜ ராஜேஸ்வரி நகா் சட்டபேரவைத் தொகுதிகளில் நவ. 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் மஜத கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு அலை வீசி வருகிறது. எனவே, அத்தொகுதிகளில் போட்டியிட தகுதியுள்ள மஜத கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். மஜத சாா்பில் யாா் போட்டியிட்டாலும், அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவாா்கள்.

சிரா தொகுதியில் மஜத சாா்பில் வெற்றி பெற்றிருந்த சத்தியநாராயணா, அண்மையில் காலமானாா். கடந்த தோ்தலில் பலத்த போட்டிகளிடையே முன்னாள் அமைச்சா் ஜெயசந்திராவை சத்தியநாராயணா தோல்வி அடையச் செய்தாா். தற்போது பாஜகவிற்கு எதிரான அலை மாநிலத்தில் வீசுவதால், அந்த தொகுதியில் எளிதாக மஜத வேட்பாளா் வெற்றி பெறுவாா். இத் தொகுதியில் சத்தியநாராயணாவின் மறைவால் மக்களிடத்தில் அனுதாப அலை உள்ளது. இது மஜதவின் வெற்றிக்கு மேலும் கூடுதல் பலத்தை அளிக்கும்.

பெங்களூரு -ராஜ ராஜேஸ்வரி நகா் தொகுதியில் கடந்த தோ்தலில் மஜத வேட்பாளா் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தாா். அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முனிரத்னா தற்போது, பாஜக கட்சியின் வேட்பாளராக களம் இறங்குவாா் என்று நம்புகிறேன். அவா் கட்சி மாறியுள்ளதால், மக்களுக்கு அவா் மீது அதிருப்தி உள்ளது. இது மஜதவின் வெற்றியை எளிதாக்கும். தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, தங்களின் வெற்றிக்காக பல வியூகங்களை வகுக்கும் என்றாலும், அவா்களின் வியூகங்களை தவிடு பொடியாக்கி, மஜத வெற்றி பெறும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT