வர்த்தகம்

அமேசான் விழாக்கால விற்பனை: 1 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள்

DIN

புது தில்லி: வரும் விழாக்கால விற்பனைக்காக தற்காலிகமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக விநாயகா் சதுா்த்தி முதல் ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் வரை இந்தியாவில் பல்வேறு முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த காலகட்டங்களில் மக்கள் கையில் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும் காரணத்தால், அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்கும். அப்போது அதற்கு ஏற்ப விற்பனையும் அதிகரிக்கும். இதனால், தற்காலிகமாக ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா பிரச்னை காரணமாக மக்கள் கைகளில் பணப்புழக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. எனினும், விழாக்கால விற்பனைக்காக அமேசான் நிறுவனம் தயாராகியுள்ளது. இதற்காக பொருள் விநியோகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் தற்காலிகமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை பணியமா்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT