இந்தியா

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் மோடி

DIN

வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் பேசியதாவது:

"ஜனநாயகத்தில் அனைவரும் கேள்வி எழுப்பலாம். ஆனால், புதிதாக ஒரு போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.அரசு எடுத்த முடிவுகள் குறித்து சிலர் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்புகின்றனர். 

இவர்கள் எந்த எல்லை வரை தவறான தகவல்களை பரப்பியுள்ளார்கள் என்பதைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நலத் திட்டங்கள் அமலாவதை அவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். 

இவர்கள்தான் பல 10 ஆண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை எப்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அமல்படுத்தப்படுவது இல்லை. அவர்களுடைய மெகா திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடையவில்லை.

இங்குள்ள கருப்பு அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் தற்போது சந்தை இருக்கிறது. இந்த நாட்டின் விவசாயிகள் ஒருநாள் சுயசார்பு இந்தியாவை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் மோடி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுத் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கே தயாராக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். இதனால், போராட்டம் 4 நான்கு நாள்களைக் கடந்தும் நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT