இந்தியா

தில்லியில் 71 ஆண்டுகளில் மிகக் குளிரான நவம்பர் மாதம்

30th Nov 2020 04:20 PM

ADVERTISEMENT


புது தில்லி: கடந்த 71 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் மிகவும் குளிரான மாதமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நவம்பர் மாதத்தில், குறைந்தபட்ச வெப்பநிலையானது 10.2 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையானது 10.2 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பு, 1938-ஆம் ஆண்டு 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 9 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1931ஆம் ஆண்டு 8.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதே, நவம்பர் மாதத்தில் பதிவான மிகக் குறைவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.
 

ADVERTISEMENT

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT