இந்தியா

கரோனா: 88 லட்சத்தைக் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை 

DIN

இந்தியாவில் தற்போது 4,53,956 பேர் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.83 சதவீதமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் 41,810 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 70.43% பேர் மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் 42,298 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தைக் (88,02,267) கடந்து, 93.71 சதவீதமாக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 70.97 சதவீதம் பேர் தில்லி, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஹரியாணா, பஞ்சாப், கேரளம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 22 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தேசிய அளவைவிட குறைவாகப் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT