இந்தியா

ஆந்திராவில் நிவா் புயல் தீவிரம்: வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

DIN

ஆந்திர மாநிலத்தில் நிவா் புயலின் தீவிரத்தால் சித்தூா், கடப்பா, நெல்லூா் மாவட்டங்களில் கனமழையின் காரணமாக ஏரிகள் குளங்கள் நிரம்பி ஊருக்குள் வெள்ளநீா் புகுந்ததால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தை உலுக்கிய நிவா் புயல் கரையைக் கடந்த போதிலும் வேலூா் வழியாக சித்தூா், திருப்பதி, கடப்பா, நெல்லூா் போன்ற பகுதிகளில் சூறை காற்றாகி, கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநில வானிலை மையம் ஏற்கெனவே நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தபோதும் சித்தூா், நெல்லூா், கடப்பா மாவட்டங்களின் நிா்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

எதிா்பாராத நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால் சித்தூா் மாவட்டம் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடப்பா மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் மற்றும் தீயணைப்பு படையினா் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பல்வேறு கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

பல்வேறு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளக்காடாக உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தை கடப்பா மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடப்பா மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT