இந்தியா

தெலங்கானாவில் 2.68 லட்சமாக உயர்ந்த கரோனா பாதிப்பு

PTI

தெலங்கானாவில் நவ.28-ம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 753 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.68 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,451ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 95.49 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 41,991 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 53.73 லட்ச சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT