இந்தியா

ஹைதராபாத் தேர்தல்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

28th Nov 2020 06:34 PM

ADVERTISEMENT

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மல்கஜ்கிரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சர் அமித் ஷா 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா மக்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT