இந்தியா

விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்: வேளாண் அமைச்சர்

28th Nov 2020 03:13 PM

ADVERTISEMENT

விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி செல்வோம் என்ற பெயரில் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநில விவசாயிகளும் தில்லி நோக்கி வாகனத்தில் பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர். 

ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது, ''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவுள்ளது. 

டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்'' என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT