இந்தியா

கேரளத்தில் மேலும் 6250 பேருக்கு கரோனா பாதிப்பு

28th Nov 2020 07:29 PM

ADVERTISEMENT

கேரளத்தில் புதிதாக 6250 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தல் 39,108 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதிதாக 6250 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதை நிலவரப்படி 64,834 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 25 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,196ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,21,522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 1594 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT