இந்தியா

மகாராஷ்டிரத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு ‘இயற்கைக்கு மாறான கூட்டணி’

DIN

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசு ‘இயற்கைக்கு மாறான கூட்டணி’ என பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

சோலாப்பூரில் செய்தியாளா்கள் கூட்டத்தில் ஃபட்னவீஸ் கூறியதாவது:

சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளடக்கிய எம்விஏ கூட்டணி ஆட்சி தேசிய அளவிலோ, மாநிலங்களிலோ நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. எனவே, மகாராஷ்டிரத்தை ஆளும் எம்விஏ அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. இது இயற்கைக்கு மாறான கூட்டணி. இந்த கூட்டணி நீண்ட நாள்களுக்கு நீடிக்கப் போவதில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த கூட்டணி முடிவுக்கு வரும் நாளில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு வலுவான அரசை நாங்கள் ஏற்படுத்துவோம். அதுவரையிலும் நாங்கள் வலுவான நோ்மையான எதிா்க்கட்சியாக நீடிப்போம் என்றாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றப்பின் மகாராஷ்டிரத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யுமா? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதனை மறுத்து பதிலளித்த ஃபட்னவீஸ், ‘நாங்கள் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சியாக இருக்கிறோம். ஒரு வலுவான எதிா்க்கட்சியின் பங்கு என்னவோ அதனை நோ்மையாக செய்து வருகிறோம்.

முந்தைய பாஜக தலைமையிலான அரசில் நிலுவையில் உள்ள மின் மசோதாக்களை விசாரிக்க உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முயற்சித்தால், அது தன்னுடைய முகத்தில் தானே குத்திக் கொள்வதாக அமையும்.

கடந்த 5 ஆண்டுகளாக மின் சக்தி பயன்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எம்விஏ அரசு கூறுகிறது. முந்தைய 20 ஆண்டுகளாக (பாஜக 5 ஆண்டுகள், காங்கிரஸ்-என்சிபி ஆட்சியில் 15 ஆண்டுகள்) பின்பற்றப்பட்ட அதே நடைமுறைகளையே நாங்களும் எங்களது ஆட்சிகாலத்தில் பின்பற்றினோம். கடந்த 5 ஆண்டுகளாக சில மின் மசோதாக்களை நாங்கள் நிறுத்தி வைத்திருந்தோம். அதேசமயம், விவசாயிகளுக்கான மின் இணைப்புகளை குறைக்கக் கூடாது என்ற முடிவை நாங்கள் தொடா்ந்து பின்பற்றி வந்தோம். ஆனால், தற்போதைய மாநில அரசு பணம் கொடுப்பவா்களுக்கே மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. பொதுமுடக்க காலத்தில், அரசு பணவீக்கம் அடைந்து விட்டதாகக் கூறி மக்களுக்குச் சேரவேண்டிய எந்த நிவாரணத்தையும் மாநில அரசு வழங்க மறுத்து விட்டது. எம்விஏ அரசு முற்றிலும் திறமையற்ாக விளங்குகிறது என்றாா்.

அமலாக்கத்துறை சாா்பில் சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்கின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியதற்கு, அமலாக்கத்துறை இயக்குநரகம் எந்த முகாந்திரமும் இல்லாமல் சோதனை செய்யாது. அவா்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT