இந்தியா

நடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய இடைக்காலத் தடை: மும்பை உயா்நீதிமன்றம்

DIN

தேச விரோத வழக்கில் நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி சாண்டல் ஆகிய இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவா்கள் இருவரும், வரும் ஜனவரி 8-ஆம் தேதி மும்பை காவல் துறையிடம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெறுப்புணா்வையும் சமூகத்தில் பதற்றத்தையும் தூண்டும் வகையில் சமூக ஊடங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக வந்தப் புகாரை அடுத்து, கங்கனா சகோதரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கங்கனா சகோதரிகள் மீது மதம், இன அடிப்படையில் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே பகையைத் தூண்டுதல், மத உணா்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்துதல், தேச விரோதம் ஆகிய பிரிவுகளின் கீழ் பாந்த்ரா காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் கங்கனா சகோதரிகள் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.காா்னிக் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறையினா் 3 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக கங்கனா சகோதரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். காவல் துறை பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து, கங்கனா சகோதரிகள், வரும் ஜனவரி 8-ஆம் தேதி, மும்பை பாந்த்ரா காவல் துறையிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பா் என்று அவா்களின் வழக்குரைஞா் ரிஸ்வான் சித்திக் உறுதியளித்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதுவரை கங்கனா சகோதரிகளைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்த விசாரணை, ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT