இந்தியா

பஞ்சாபில் டிச.1 முதல் இரவு நேர பொதுமுடக்கம்: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு

25th Nov 2020 02:51 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை அறிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். பொதுமுடக்க நேரத்தில்  உணவு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பஞ்சாபில் இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 665 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT