இந்தியா

டிபிஎஸ் வங்கியுடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

25th Nov 2020 03:57 PM

ADVERTISEMENT

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு உள்ளவா்களுக்கு நிதித் தேவையை பூா்த்தி செய்து வந்தது.

லஷ்மி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை அந்த வங்கி சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

மேலும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Tags : Lakshmi vilas bank
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT