இந்தியா

வரி செலுத்துவோருக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ள ரூ. 1.36 லட்சம் கோடி!

25th Nov 2020 07:02 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி செலுத்துவோருக்கு ரூ. 1.36 லட்சம் கோடி அளவில் வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக (டாக்ஸ் ரீபண்ட்) மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 24-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்த பேர்களுக்கு, ரூ. 1,36,962 கோடி அளவில் வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வருமான வரித்துறையானது குறிப்பிட்ட காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 39,28,067 கணக்குகளுக்கு, ரூ. 36,028 கோடியினையும், பெருநிறுவன வரி விதிப்பு முறையில் 1,96,880 கணக்குகளுக்கு ரூ. 1,00,934 கோடியினையும் திருப்பியளிதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் தகவல்கள அனைத்தும் வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT