இந்தியா

கரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனைத் தேர்வு செய்யும்? - ராகுல் கேள்வி

23rd Nov 2020 06:14 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனிடையே கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில், கரோனா தடுப்பூசி பற்றிய திட்டங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

1. கரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனைத் தேர்வு செய்யும்? ஏன்?

ADVERTISEMENT

2. கரோனா தடுப்பூசியை முதலில் யார் பெறுவார்கள்? அவர்களின் விநியோக உத்தி என்னவாக இருக்கும்?

3. கரோனா தடுப்பூசி இலவசம் என்பதை உறுதிப்படுத்த பி.எம். கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா? 

4. அனைத்து இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்? 

என்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக கரோனா தடுப்பூசி மேம்பாடு, அதற்கான ஒப்புதல் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT