இந்தியா

புணேவில் ஒரே நாளில் 6 பேர் பலி: 194 பேருக்கு கரோனா தொற்று

15th May 2020 11:29 AM

ADVERTISEMENT

 

புணேவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.  

இந்நிலையில், புணேவில் வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், 194 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

புணே மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,426 ஆகவும், இதுவரை 181 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் கரோனாவுக்கு மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 27,524 ஆக உள்ளது. 1.019 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மும்பையில் மட்டும் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT