இந்தியா

காபூலில் இருந்து அழைத்துவரப்பட்ட 35 இந்தியர்கள்

30th Mar 2020 04:24 PM

ADVERTISEMENT


கரோனா அச்சுறுத்தல் காரணமாக விமானச் சேவை முற்றிலும் முடக்கப்பட்டதால், காபூலில் சிக்கித் தவித்து வந்த 35 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து 35 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில் இருந்தவர்கள் 35 பேரும் இந்தோ - திபெத் எல்லைக் காவல்படையின் முகாமில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT