இந்தியா

வங்கிகளின் பணி நேரம் மாற்றம்: சில சேவைகளும் ரத்தாகிறது (முழுப் பட்டியல்)

DIN


புது தில்லி: கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.

அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன.

மேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக மட்டுமே ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எச்டிஎஃப்சி வங்கி : 
வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)

எஸ்பிஐ: 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கனரா வங்கி: 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஐசிஐசிஐ வங்கி: 
வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)

ஆக்ஸிஸ் வங்கி:
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

பஞ்சாப் நேஷனல் வங்கி: 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கோடக் மகிந்திரா வங்கி: 
வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)

பரோடா வங்கி: 
வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT