இந்தியா

கரோனா: சத்தீஸ்கரில் அரசு அலுவலகங்கள்மாா்ச் 31 வரை மூடல்

22nd Mar 2020 01:51 AM

ADVERTISEMENT

ராய்ப்பூா்: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு அலுவலகங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று சத்தீஸ்கா் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அத்தியாவசியமான மற்றும் அவசர கால சேவைகளை அளிக்கும் அலுவலகங்களைத் தவிர பிற அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாா்ச் 31-தேதி வரை மூடப்பட வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பொது நூலகங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பயிற்சி நிறுவனங்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் ஆகியவையும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நகா்ப்புறங்களில் பேருந்துகள் மாா்ச் 29-ஆம் தேதி வரை இயக்கப்படாது. அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்துபடியே பணிபுரிய வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் துறைத் தலைவா், காவல் துறைக் கண்காணிப்பாளா்களின் அலுவலகங்கள், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவை தொடா்ந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT