இந்தியா

தில்லியில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

19th Mar 2020 12:54 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர், மருத்துவமனைக் கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்தில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா அறிகுறி தென்பட்டதால், உடனடியாக அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனிப்பிரிவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறி, 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் எடுக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT