இந்தியா

கரோனா எதிரொலி: 31-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 155 ரயில்கள் ரத்து

19th Mar 2020 11:19 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 155 ரயில்கள் குறைந்த முன்பதிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளைக் கொண்ட ரயில்கள் நேற்று இரவு கண்டறியப்பட்டு, அவற்றை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

ஏற்கனவே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மார்ச் 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 84 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு 100% கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT