இந்தியா

ஆந்திரத்தில் கரோனாவால் இறந்த 72 வயது முதியவர் உடலை ஜே.சி.பி.யில் எடுத்துச்சென்ற அவலம்

DIN

ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை ஜே.சி.பி மூலம் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலநிலை நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதுடைய முன்னாள் நகராட்சி ஊழியர். இவருக்கு அண்மையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தொற்று கண்டறியப்பட்ட அதே நாளிலேயே முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதியவர் உடலை வீட்டின் அருகே அடக்கம் செய்ய அவரது பேத்தி முயற்சி மேற்கொண்டிருக்கிறார். 

ஆனால் இதற்கு அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனே நகராட்சி ஊழியர்களை அழைத்து முதியவரின் உடலை எடுத்துச் செல்லும்படி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் முதியவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதுகுறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ், பலசா நகராட்சி ஆணையர் நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜீவ் உள்ளிட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேமசயம், இந்தச் சம்பவத்துக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக இதே மாவட்டத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி கரோனாவால் இறந்த பெண் ஒருவரின் உடலை டிராக்டரில் கொண்டுசென்று அடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT