இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொலை

26th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

பாராமுல்லா மாவட்டத்தின் சோபோா் பகுதியில் ஓரிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை வியாழக்கிழமை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

அவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியிலிருந்து தப்பியோடிய எஞ்சிய பயங்கரவாதிகளை தேடி வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT