இந்தியா

பஞ்சாபில் 40 காவல்துறை அதிகாரிகள் பிளாஸ்மா தானம்

28th Jul 2020 04:54 PM

ADVERTISEMENT

 

பஞ்சாபில் 40 காவல்துறை ஊழியர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன் வந்துள்ளனர். 

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க, சமீபத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட 40 பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உயிரைக் காப்பதற்காக தங்கள் இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஜலந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் நவ்ஜோத் சிங் மஹால் நோய்த் தொற்றிலிருந்து மீண்ட பின்னர் பிளாஸ்மா குறித்து மற்ற அதிகாரிகளுக்கு வழிநடத்திவருகிறார் என்று காவல்துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா தெரிவித்தார். 

ADVERTISEMENT

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

கடந்த 24 மணி நேரத்தில் ஜலந்தர் கிராமத்தைச் சேர்ந்த 40 காவல்துறையினர் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அதிகமானோர் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளுக்கு உதவ பிளாஸ்மா தானம் செய்யத் தன்னார்வலர்களுக்காக பஞ்சாப் காவல்துறையால் ஒரு சிறப்பு இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல்துறை ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்புப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, பிளாஸ்மா நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் கணிசமாக உயரக்கூடும் என்றார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இதுவரை 831 பஞ்சாப் காவல்துறையினருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. அதில் 336 பேர் குணமடைந்துள்ளனர். 4945 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : plasma
ADVERTISEMENT
ADVERTISEMENT