இந்தியா

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை

25th Jul 2020 07:17 AM

ADVERTISEMENT

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் பெஞ்சமின் கண்ட்ஸுடன் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா். முக்கியமாக, போா்த்தளவாடங்கள் கொள்முதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடா்பாக அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

பாதுகாப்புத் துறையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரிடம் எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு கோரிக்கை விடுத்தாா். பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்தும் தலைவா்கள் இருவரும் ஆலோசித்தனா்.

ADVERTISEMENT

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிலவி வரும் பதற்றநிலை குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது அவா்கள் விவாதித்தனா்” என்றனா்.

இந்தியாவில் போா்த் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் 74 சதவீதம் வரை நேரடி முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT