இந்தியா

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக் கொலை

13th Jul 2020 05:07 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜெய்ஷ் - இ - முகமு பயங்கரவாதிகள் இரண்டு பேர் உள்பட மூவர் ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடந்த இந்த மோதலில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவர் நஸீர் என்கிற ஷஹ்பாஸ் என்கிற பஸ் பாய் என்பதும், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஏ பிரிவு பயங்கரவாதி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இன்று காலை பாதுகாப்புப் படையினர் அனந்தநாக் மாவட்டத்தில் ஸ்ரீகுஃப்வாரா பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கே பயங்கரவாதிகள் மறைந்திருந்ததை அறிந்த பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதிலடி கொடுத்து அவர்கைளை சுட்டுக் கொன்றனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

Tags : india news
ADVERTISEMENT
ADVERTISEMENT