இந்தியா

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

13th Jul 2020 12:49 PM

ADVERTISEMENT

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in. என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம். 

முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த தோ்வுகள் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கல்வியாளர்கள் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வுகள், மாணவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

Tags : CBSE
ADVERTISEMENT
ADVERTISEMENT