இந்தியா

விடைத்தாளுடன் ரூ.100 வைத்தால்.. உத்தரப்பிரதேச ஆசிரியரின் பலே ஐடியா

21st Feb 2020 10:44 AM

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு தவறான யோசனைக் கூறிய குற்றத்துக்காக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவறான யோசனையைக் கூறிய ஹரிவன்ஷ் மெமோரியல் இன்டர் கல்லூரியின் மேலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரவீன் மால் பேசும் இரண்டு நிமிட விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த விடியோவில், உத்தரப்பிரதேச பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் வழங்க அவர் ஒரு யோசனையைக் கூறுகிறார். மேலும் இந்த யோசனையை பின்பற்றினால் போதும், ஒருவர் கூட ஃபெயில் ஆகமாட்டார்கள் என்றும் அவர் உறுதி அளிக்கிறார்.

அப்படி என்னதான் சொல்கிறார் என்றால், தேர்வுக் கூடத்தில் ஒழுங்காக இருங்கள். பிட் அடித்து மாட்டிக் கொண்டாலும், ஆசிரியர் அடித்துவிட்டாலும், கையை கட்டிக் கொண்டு அடுத்த அடிக்கும் தயாராக இருங்கள். ஆசிரியருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். இல்லையென்றால் அவர் உங்கள் எதிர்காலத்தையே முடக்கிவிடுவார்.

ADVERTISEMENT

ஒரு கேள்வியையும் விட்டு விடாதீர்கள். கேள்விகளை மட்டும் எழுதிவைத்து விட்டால் கூட போதும், விடைத்தாளில் ஒரு 100 ரூபாயை வைத்துவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு ஆசிரியர்கள் உங்களுக்கு முழு மதிப்பெண் வழங்கிவிடுவார்கள். யாரும் அதை பரிசோதிக்கப் போவதில்லை. இப்படி செய்தால் யாருமே ஃபெயில் ஆக மாட்டீர்கள் என்று மிக உற்சாகமாகப் பேசியுள்ளார்.

இந்த விடியோவை, அங்கிருந்த மாணவர் ஒருவர் ரகசியமாக படம்பிடித்து, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT