இந்தியா

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பிய அமுல்யாவிற்கு நக்ஸலுடன் தொடர்பு: கர்நாடக முதல்வர் தகவல்

21st Feb 2020 01:19 PM

ADVERTISEMENT

 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பிய இளம்பெண்ணுக்கு நக்ஸலுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' இளம்பெண் அமுல்யா கோஷம் எழுப்பினார். இதையடுத்து, உடனடியாக தேசத் துரோக வழக்கில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண் அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கப்படமாட்டாது. அவருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். அவரது தந்தையும் மகளை பாதுகாக்க முன்வரவில்லை. அவர் ஏற்கெனவே நக்ஸல்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்' என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT

அமுல்யா சம்மந்தப்பட்டவர்களிடம் பேரணியின் அமைப்பாளர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண் தேசத் துரோக வழக்கில் கைது

முன்னதாக, பெங்களுருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசியும் அதிர்ச்சி அடைந்ததுடன் சிறுமியின் செயலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

Tags : CAA
ADVERTISEMENT
ADVERTISEMENT