இந்தியா

உச்ச கட்ட 'டி.ஜே' இசை: திருமண ஊர்வலத்திலேயே உயிரை விட்ட மணமகன்

16th Feb 2020 06:31 PM

ADVERTISEMENT

 

நிஜாமாபாத்: திருமண ஊர்வலத்தில் ஒலித்த உச்ச கட்ட 'டி.ஜே' இசையின் காரணமாக மாரடைப்பில் மணமகன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தின் போத்தன் நகரில் கணேஷ் (25) மற்றும் ஸ்வப்னா (24) இருவருக்கும் சனிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. மாலை திருமண நிகழ்வின் ஒருபகுதியான 'பாரத்' என்னும்  ஊர்வலத்தின்போது டி.ஜே இசையமைப்பில் பாடல்கள் உச்ச ஸ்தாயியில் ஒலிபரப்பப் பட்டன. 

கார் ஊர்வலத்தில் பாடல்களுக்கு அவரது உறவினர்கள் நடனமாடத் தொடங்கினர். ஆனால் இசையின் அதிகபட்ச ஓசையின் காரணமாக காரில் அமர்ந்திருந்த கணேஷ் அசவுகரியமாக உணர்ந்துள்ளார். அதனால் காரை விட்டு இறங்காமலேயே இருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் சிறிதுநேரத்தில் அவரும் காரை விட்டு இறங்கிவந்து சிறிது நேரம் நடனத்தில் சேர்ந்து ஆட முயற்சித்தார். பின்னர் அவர் மிகவும் சோர்ந்து ஊர்வலத்திலேயே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். திடீர் இதய அடைப்பு (cardiac arrest) காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உச்ச பட்ச இசை அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

தருமன் ஊர்வலத்தில் மணமகன் மாரடைப்பால் இறந்துபோன சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT