இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: கேரள அரசு முடிவு

7th Dec 2020 08:02 PM

ADVERTISEMENT


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:

"மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்த வாரமே முறையிடவுள்ளோம். கேரளத்தில் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படாது. அதற்கு மாற்றாக ஒரு சட்டம் பரிந்துரைக்கப்படும்."

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 12-வது நாள்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டிசம்பர் 8 நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கேரள அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளது.

Tags : farm laws
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT