இந்தியா

விவசாயிகளுடன் பேச்சு: பிரதமர் மோடியுடன் அமைச்சர்கள் ஆலோசனை

5th Dec 2020 11:33 AM

ADVERTISEMENT


புது தில்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி மற்றும் தில்லியின் எல்லைகளில் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை, விவசாயிகளுடன் மத்திய அரசு நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியிருந்தனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த அகங்காரமும் இல்லை, விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆலோசித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன்படி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன், அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதுபோன்ற உறுதிமொழியை அளிக்க முடியுமா? புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கலாமா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT