இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 4,067 பேருக்கு கரோனா; 73 பேர் பலி

4th Dec 2020 07:35 PM

ADVERTISEMENT

தில்லியில் இன்று புதிதாக 4,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று மொத்தம் 85,003 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,191 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 44,812 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
அதில் புதிதாக 4,067 தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,86,125ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 73 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 9,497ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,252 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
நோய் பாதிப்பில் இருந்து இன்று 4,862 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,48,376-ஆக உயா்ந்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 5909 இடங்கள் உள்ளன.  16,950 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். 
மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,055 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT