இந்தியா

95 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

புது தில்லி: நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 35,551 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,34,964 ஆக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் 89,73, 373 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.11 சதவீதமாகும். வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 526 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,38,648 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்பவா்கள் எண்ணிக்கை 4,22,943 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 5 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.44 சதவீதம் மட்டுமே ஆகும்.

புதிதாக ஏற்பட்ட 526 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 111, தில்லியில் 82, மேற்கு வங்கத்தில் 51, ஹரியாணாவில் 32, உத்தர பிரதேசத்தில் 29, கேரளத்தில் 28, சத்தீஸ்கரில் 27, பஞ்சாபில் 21 போ் உயிரிழந்தனா்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இப்போது 95 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 2-ஆம் தேதி வரை 14,35,57,647 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,11,698 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT