இந்தியா

மகாராஷ்டிரம்: விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டம்

DIN

ஒளரங்காபாத்: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த 1-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

அதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கல்யாண் காலே கூறியதாவது, ''வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தொழிலாளர் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தேசிய அளவிலான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. 


விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அதனை முடக்கும் நோக்கில் விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT