இந்தியா

2ஜி: மேல்முறையீட்டு மனு ஜன.13-இல் விசாரணை

தினமணி

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்பட 19 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 13-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 இந்த மேல்முறையீட்டு விவகாரத்தை விசாரித்து வந்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, திங்கள்கிழமை (நவ.30) ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி யோகேஷ் கன்னா தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சோனியா மாத்தூர், "முன்னர் விசாரித்த நீதிபதி அமர்வு தினசரி அடிப்படையில் மனுவை விசாரித்தது போல விசாரிக்க வேண்டும். சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்க ஒரு வாரம் தேவைப்படுகிறது. இதனால், டிசம்பர் பிற்பகுதியிலேயே இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதி யோகேஷ் கன்னா, "டிசம்பரில் தேதி அளிப்பது சாத்தியமில்லை. ஜனவரியில் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விசாரிக்கப்படும்' எனக் கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஜனவரியில் விசாரணைக்குப் பட்டியலிடப்படவுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 19 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2017-இல் விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களை அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி விசாரித்து தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT