இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்க வழிவகை: தேர்தல் ஆணையம்

1st Dec 2020 10:50 AM

ADVERTISEMENT


புது தில்லி: வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இணையவழியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க இயலுமா என்று சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது.

இதற்கு பதிலளித்திருக்கும் தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களை இணையவழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாராக உள்ளன.  உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : election commission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT