இந்தியா

கரோனா: நாட்டில் தினசரி பாதிப்பு 38,772-ஆக குறைந்தது

DIN


புது தில்லி: நாட்டில் கரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பு திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,772 ஆக குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்தில் தினசரி பாதிப்பு 40,000- க்கு கீழ் வருவது இது 7- ஆவது முறையாகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 94,31,691 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 443 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,37,772 ஆக உயர்ந்தது. எனினும், மொத்த பாதிப்பில் உயிரிழப்பு சதவீதம் 1.45 ஆக குறைந்துள்ளது.

88,47,600 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பாதிப்பில் இது 93.81 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,46,952 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 4.74 சதவீதமாகும். 

புதிதாக ஏற்பட்ட 443 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 85 பேர் பலியாகினர். இதற்கு அடுத்து தில்லியில் 68, மேற்கு வங்கத்தில் 54, கேரளத்தில் 27, ஹரியாணாவில் 26, உத்தர பிரதேசத்தில் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23- ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5- ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16- ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பர் 28- ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபர் 11- ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபர் 29- ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பர் 20- ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT