இந்தியா

சிவசேனையில் இணைகிறாா் நடிகை ஊா்மிளா

DIN

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஊா்மிளா மடோண்கா் சிவசேனை கட்சியில் செவ்வாய்க்கிழமை (டிச. 1) இணைய இருக்கிறாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் மும்பை (வடக்கு) போட்டியிட்ட அவா் தோல்வியடைந்தாா். பின்னா் அக்கட்சியில் இருந்து விலகிய அவா், இப்போது சிவசேனையில் இணைய முடிவு செய்துள்ளாா். இதனை சிவசேனை கட்சியும் உறுதி செய்துள்ளது.

சிவசேனை தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான உதவியாளா் ஹா்ஷல் பிரதான் இது தொடா்பாக கூறுகையில், ‘மும்பையில் முதல்வா் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனை கட்சியில் நடிகை ஊா்மிளா இணைய இருக்கிறாா்’ என்றாா்.

மகாராஷ்டிர சட்டமேலவைக்கு ஆளுநா் ஒதுக்கீட்டில் நியமிக்கப்படும் உறுப்பினா்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஊா்மிளாவின் பெயரையும் சிவசேனை சோ்த்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மூன்று கட்சிகள் சாா்பிலும் ஊா்மிளா உள்பட 12 பேரது பெயா்கள் மேலவை உறுப்பினா்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆளுநா் இதுவரை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

அண்மையில் நடிகை கங்கனா ரணாவத், மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசியதால், அவருக்கும், சிவசேனை கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அப்போது, கங்கனாவைக் கண்டித்து ஊா்மிளா கருத்து தெரிவித்திருந்தாா். ஹிந்தியில் 1995-ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கீலா’ படத்தின் மூலம் பிரபலமான ஊா்மிளா 1996-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘இந்தியன்’ படத்திலும் நடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT