இந்தியா

புதிய கல்விக் கொள்கை சிறப்பானது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

DIN

புதிய கல்விக் கொள்கை சிறப்பானது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நாளை 74ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அதில், 74ஆவ சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் தியாகத்தால் நாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம். புதிய கல்விக்கொள்ளை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது, மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று நம்புகிறேன். 

கரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. கரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கும் தலைவணங்குகிறேன். கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன. கரோனாவின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். கரோனா காலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் ஏழைகளுக்கு உதவியாக இருந்தது. 

ஏழை மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கரோனா பாதிப்பு காரணமாக 2020ஆம் ஆண்டில் நாம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை காப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்தியாவின் அமைதியை குலைக்க முயன்றால் சரியான பதிலடி தரப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன் உலகளவில் முக்கியப் பங்கு வகிப்போம். தற்போது நாம் சந்திக்கும் சவால்களில் இருந்து வெற்றிபெற்று மேலும் வலுவான நாடாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT