இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்ச நீதிமன்றம்

14th Aug 2020 11:29 AM

ADVERTISEMENT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் சரியாக கையாளவில்லை என்று பிரசாந்த் பூஷண் விமரிசித்திருந்தார். மேலும், நீதிபதிகளின் செயல்பாட்டை சமூக வலைத்தளங்களில் விமரிசித்திருந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் குறித்து வரும் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. ஆனால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், நீதித்துறைக்கு எதிராக சுட்டுரையில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல், பீமா கோரேகான் வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சமூக ஆா்வலா்கள் வராவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோா் நடத்தப்பட்ட விவகாரம் குறித்தும் நீதித்துறையை விமா்சிக்கும் வகையில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பிரசாந்த் பூஷணின் பதிவுகளுக்கு அனுமதி அளித்த சுட்டுரை நிறுவனத்தின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விவகாரம் தொடா்பாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு விசாரணை மேற்கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT