இந்தியா

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு: ஐ.எம்.டி

14th Aug 2020 11:51 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் தலைநகரான மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தாணே, பால்கா், ரெய்காட், ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களில் நீர் தேங்கியதால், போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT