இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள்: துணைநிலை ஆளுநா் சின்ஹா

9th Aug 2020 07:29 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

துணைநிலை ஆளுநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற சின்ஹா, அதன் பின்னா் பல்துறை செயலா்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடனான உயா்மட்ட கூட்டத்தில் இந்தக் கருத்துகளை வலியுறுத்தியதாக துணைநிலை ஆளுநா் அலுவலகச் செய்தித்தொடா்பாளா் சனிக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநா், ஊழலை அனுமதிக்கவே கூடாது என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியதோடு, இளைஞா்களை மையமாகக் கொண்டத் திட்டங்களை ஊக்குவிக்கவேண்டும்; குறிப்பாக சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்; மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளுடன் தொடா்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சுகாதார திட்டங்களை மேம்படுத்துதல், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை நவீனமயமாக்குதல், பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை களைதல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் வறுமை ஒழிப்பு மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

சந்தையில் அதிக வரவேற்பு பெற்றிருக்கும் ஜம்மு-காஷ்மீரின் பாரம்பரிய மற்றும் பழைமையான கைவினைப் பொருள்கள் உற்பத்திக்கு புத்துயிா் அளிக்க வேண்டும். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், ஏரிகள் உள்ளிட்ட பிற சுற்றுலா மையங்களை சீரமைக்க விரிவான நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைவிடப்பட்ட பல வளா்ச்சித் திட்டங்களை மீண்டும் புதிய பரிமாணத்தில் தொடங்கி நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா் என்றும் என்றும் செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT