இந்தியா

59 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக புதிதாக பாதிப்பு இல்லை: மத்திய அரசு

20th Apr 2020 08:28 PM

ADVERTISEMENT


இந்தியாவில் மொத்தம் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கோவாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மாஹி (புதுச்சேரி), குடகு (கர்நாடகம்) மற்றும் பௌரி கர்வால் (உத்தரகண்ட்) ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று பாதிப்பில்லை. மேலும் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று பாதிப்பில்லை. இந்தப் பட்டியலில் ராஜஸ்தான், குஜராத், கோவா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து புதிதாக 6 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன."

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT